நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழகத்திற்கு வருகை புரிந்த இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கி இருந்தார்.

https://youtu.be/EOCGJn9hZNc​​​​​​​

கடந்த 28ஆம் தேதி குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரியில் பயிற்சி முடித்த ராணுவ அதிகாரிகளின் மத்தியில் உரையாற்றினார். இதனை தொடர்ந்து 29.11.2024 அன்று உதகை ஆளுநர் மாளிகையில் பழங்குடியின மக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் இன்று மீண்டும் டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக உதகை ஆளுநர் மாளிகை வளாகத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு,  மக்னோலியா மரக்கன்றை நடவு செய்தார்.

இந்நிகழ்வின் போது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.