பெஞ்சல் புயல் நேற்று முன்தினம் இரவு கரையை கடந்த நிலையில் நேற்று காலை முதலே உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் மேகமூட்டத்துடன் அவ்வபோது சாரல் மழை பெய்து வந்தது. மேகமூட்டத்துடன் கூடிய சாரல் மழையின் காரணமாக கடும் குளிர் நிலவி வந்ததால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
நேற்று இரவு முதல் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக உதகை நொண்டிமேடு ஒத்த மரம் பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து அதில் வாசித்த ஆறுமுகம் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்
இந்நிலையில் அப்பகுதியில் ஆய்வு மேற்க்கொண்ட உதகை வருவாய் கோட்டாட்சியர் சதீஸ் 50க்கும் மேற்பட்ட வீடுகள் மண் வீடுகளாக உள்ளதால் அப்பகுதி மக்களின் பாதுகாப்பை கருதி மாவட்ட நிர்வாகம் உத்தரவின் படி அவர்களை நிவாரணம் முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது