ஃபெஞ்சல் புயல் காரணமாக நீலகிரி கோவை ஆகிய மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

https://youtu.be/ZFlqZlOoV2Y

இந்நிலையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து உதகையில் மழை பெய்து வந்த நிலையில் இன்று காலை உதகை நொண்டிமேடு பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஆறுமுகம் என்ற கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த ஆறுமுகத்தின் உடலை உதகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதில் உயிரிழந்தவரின் உடலுக்கு தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின் பேரில் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ௹பாய் 4 லட்சம் அவரது பெற்றோரின் வங்கி கணக்கில் வழங்குவதற்கான ஆணையை வழங்கி ஆறுதல் கூறினார்.