நீலகிரி மாவட்டம், ஊட்டியில் புயல் மழையின் காரணமாக மண்சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளதால் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெண்டிமேடு பகுதியில் உள்ள 20 குடும்பங்கள் மேல் தலையாட்டுமந்து பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு, மாவட்ட காவல் கண்ணாணிப்பாளர் நிஷா ஆகியோர் நேரில் சந்தித்து ஆய்வு செய்து, அவர்களின் தேவைகளை கேட்டறித்து, பாதுகாப்பு நடவடிகைகளை மேற்கொண்டனர்.
இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், கோட்டாட்சியர் சதீஸ், வட்டாட்சியர் சங்கர் கணேஷ், நகராட்சி ஆணையாளர் ஸ்டேன்லி பாபு, வருவாய் ஆய்வாளர் தமிழ்வாணன். கிராம நிர்வாக அலுவலர் ஹரிஷா, உதவி கிராம நிர்வாக அலுவலர் கலையரசன் உட்பட வருவாய் துறைனர், காவல்துறையினர், நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.