நீலகிரி மாவட்டம் ஊட்டி நொண்டிமேடு ஒத்த மரம் பகுதியில் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தில் அங்கு வசித்து வந்த ஆறுமுகம் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 

மழையின் காரணமாக மண்சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளதால் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெண்டிமேடு பகுதியில் உள்ள 20 குடும்பங்கள் மேல் தலையாட்டுமந்தில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

https://youtu.be/2lkvuyYrZhY

அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு உணவு மற்றும் தேவையான வசதிகளை செய்துக்கொடுத்தனர்.

அதனை தொடர்ந்து இரவு 10.00 மணியளவில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டு சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலியானார் அச்சமபவ இpடத்தை பார்வையிட்டு, அப்பகுதியில் சாலை அமைக்க முடியுமா? ஏன்பது குறித்தும் ஆய்வு செய்தனர். மேலும் அப்பகுதியில் இருந்து முகாமில் தங்கவைக்கப்பட்டவர்கள் முகாமில் உள்ளனரா எனவும் உறுதிப்படுத்திக்கொண்டனர்.

ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், வட்டாட்சியர் சங்கர் கணேஷ், கிராம நிர்வாக அலுவலர் ஹரிஷா, உதவி கிராம நிர்வாக அலுவலர் கலையரசன்  உட்பட வருவாய் துறைனர், காவல்துறையினர் உடனிருந்தனர்.