நீலகிரி மாவட்டம் உதகையில் அரசு மருத்துவம கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் மருத்தவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் தேர்வு எழுதிவந்த நிலையில், கல்லூரி நிர்வாகத்திற்கு இமெயில் மூலம் மர்ம நபர் ஒருவர் கல்லூரிக்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனை அடுத்து மருத்துவ கல்லூரியில் முதல்வர் உடனடியாக உதகை காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் உதகை காவல்துறையினர் விரைந்து வந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தற்போது உதகையில் இருந்து மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு பள்ளி வளாகம் முழுவதும் சோதனை செய்யப்பட்டு வருகிறது.தொடரந்து அடிக்கடி பள்ளிக்கு,கல்லூரிகுளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.