நீலகிரி மாவட்டம் மலை மாவட்டமாக உள்ளதாலும்இ பாறைகள் அதிகமாக இருப்பதாலும்இ வனப்பகுதியை ஒட்டி இருப்பதாலும் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் வகையில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என்று மத்தியஇ மாநில அரசுகள் அறிவித்து உள்ளன.
இதனால் நீலகிரி மாவட்டத்தில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் மலைச்சரிவுகளில் அனுமதி இன்றி பொக்லைன் எந்திரங்களை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதனால் நீலகிரி மாவட்டத்தில் கட்டிடங்கள் கட்ட மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இவ்வாறு மாவட்ட நிர்வாகத்திலும் அனுமதி வாங்கினாலும் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடமும் அனுமதி வாங்க வேண்டும்.
இந்தநிலையில் குன்னூர் அடுத்த அருவங்காடு பகுதியை சேர்ந்த சுபாஷ் ராஜ்குமார் என்பவர் கட்டிடம் கட்ட மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி வாங்கிவிட்டுஇ உள்ளாட்சி அமைப்பான ஜெகதளா பேருராட்சி அலுவலகத்தில் அனுமதிக்காக விண்ணப்பித்ததாக கூறபடுகிறது.
இதைத்தொடர்ந்து கட்டிட அனுமதி வழங்குவதற்கு சுபாஷ் ராஜ்குமாரிடம், ஜெகதளா பேருராட்சி செயல் அலுவலர் சரவணன் ராஜன் ரு.50 ஆயிரம் லஞ்சம் கேட்டு உள்ளதாக கூறபடுகிறது. லஞ்சம் வழங்க விருப்பமில்லாத சுபாஷ் ராஜ்குமார் இது குறித்து நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர் பரிமளா தேவி தலைமையிலான போலீசாரின் ஆலோசனைபடி ரசாயனம் தடவிய 30 ஆயிரம் ருபாய் கொண்ட நோட்டு கட்டுக்களை சுபாஷ் ராஜ்குமார், ஜெகதளா பேருராட்சி செயல் அலுவலர் சரவணன் ராஜனிடம் கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சரவணன் ராஜனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. https://youtu.be/8ufyWIhYnqo