நீலகிரி மாவட்டம் உதகை பழைய அக்கரகாரம் பகுதியில் பல வருடங்கங்களாக   வெல்டிங் கடைகள், இரும்பு கடைகள் இயங்கி வருகின்றன

https://youtu.be/HX1S97n44Gw

தற்போது பகுதியில் சுமார் 6 க்கும் மேற்பட்ட  வெல்டிங் கடைகள் செயல்பட்டு வருவதாகவும் மழை காலங்களில் அப்பகுதியில் மழை நீர் தேங்கி விடுவதால் கடைகளை திறக்கமுடியாத சூழல் உருவாக்கி உள்ளதாக கூறும் அவர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறும் அவர்கள் 
 
வெல்டிங் கடைகள் என்பதால் மின்சாரத்தில் இயங்கும் இயந்திரங்களாக இருப்பதால் மழை நீர் தேங்குவதால் மின்சாரம் தாக்கும் அபாயம் உள்ளதாகவும் எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு கடைகள் முன்பு மழை நீர் தேங்காமல் செல்லுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளனர்