பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி இந்தியா முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பஸ் நிலையம், ரயில் நிலையம், நகரின் மைய பகுதியில் இருக்கும் கோவில்கள் மற்றும் மசூதிகள் ஆகியவற்றிக்கு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

https://youtu.be/lrVt8-h3uyo

மேலும் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா அவர்கள் அறிவுறுத்தல் படி பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் வழிபாட்டு தளங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் கருவி, மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை செய்தனர்.