டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னையில் நடைபெறும் விழாவில் பல்வேறு துறை சார்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, தூய்மை பணியாளர்களை கவுரவித்தார்.
அதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டம் உதகை தனியார் திருமண மண்டபத்தில் மாண்புமிகு அரசு தலைமை கொறடா கா.இராமசந்திரன் தலைமையில் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் முன்னிலையில் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் விழாவில் கலந்துகொண்டு குத்துவிளக்கு யேற்றி விழாவை துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதையை செய்து இனிப்புகளை வழங்கி கவுரவித்தார்.
இந்த நிகழ்வில் உதகை நகராட்சி தலைவர் வாணிஸ்வரி,துணை தலைவர் ரவிக்குமார், நகராட்சி ஆணையாளர் ஸ்டாலின் பாபு, குன்னூர் மற்றும் கூடலூர் நகராட்சி ஆணையாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.