மசினகுடி பொக்காபுரம் மாரியம்மன் கோவில், கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது...

https://youtu.be/EDn4WPsM9Nk


நீலகிரி மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற முதுமலை மசினகுடி பொக்காபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் திருவிழா இன்று காலை மங்கள இசையுடன் துவங்கியது.

இதனை தொடர்ந்து மூத்த பிள்ளையார் வழிபாடு, இரண்டாம் கால வேள்வி நடைபெற்றது. மேலும் ஜீவ கலைகள் நாடியின் வழியாக மூலதிருமேனியை அடைதல் நிகழ்ச்சியும்,  நிறையாகுதி பேரொளி வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதனை தொடர்ந்து காலை  மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, கருவறை மாரியம்மனுக்கு பெருந்திருமஞ்சனம், பதின் மங்களக்காட்சி, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு பிரசித்தி பெற்ற பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு, உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருள் பெற்றனர்.