நீலகிரி மாவட்ட உதகை நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற கூட்டம் நகர் மன்ற தலைவர் வானீஸ்வரி , துணை தலைவர் ரவிக்குமார் முன்னிலையில் நகராட்சி ஆணையாளர் (பொ) ராஜசேகர், நகர் நல மருத்துவ அலுவலர் சிபி மற்றும் நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் 36 வார்டுகளின் நகரமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு குடிநீர் வசதி, சாலைவசதி, தடுப்பு சுவர் வசதி, தெருவிளக்கு வசதி போன்ற அடிப்படை வசதிகள் குறித்து விவாதித்தனர்.
மேலும் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் கழிவுநீர் சென்று வருவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும், சாலைகளில் குப்பைகள் குவிந்து காணப்படுவதால் அதனை நகராட்சி நிர்வாகம் அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர் மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.
தொடர்ந்து துணை தலைவர் ரவிக்குமார் பேசும் பொழுது மார்க்கெட் வியாபாரிகளை பாதிக்காதவாறு 2 ஆம் கட்டமாக புதிய மார்க்கெட் பணிகளை துவங்கவேண்டும் எனவும் தற்போது செயல் பட்டு வரும் தற்காலிக மார்க்கெட் பகுதியில் வியாபாரிகளுக்கு அடிப்படை தேவைகளை செய்துதர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். https://youtu.be/8iUl8ztdqKU