நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்கு உட்பட்ட 26 வது வார்டு இந்திரா காலனி பகுதியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட குடுபங்கள் வசித்து வருகின்றனர்
இந்நிலையில் அப்பகுதி மக்கள் பயன்படுத்துவதற்கு சிறிய நடைபாதை இருந்து வந்த ஆனால் நடைபாதை சிறிய அளவில் இருந்தால் அப்பகுதி மக்கள் அவசர தேவைகளுக்கு பயன்படுத்த முடியாத சூழல் இருந்து வந்த நிலையில்
அப்பகுதி நகர் மன்ற உறுப்பினர் பிரியா அவர்கள் முயற்சியால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூபாய் 10 லச்சம் மதிப்பில் அப்பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது
மேலும் அப்பகுதியில் சாலை அமைப்பதற்கு அனுமதி வழங்கிய நகராட்சி ஆணையாளர் மற்றும் அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்