கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், அரக்கோடு ஊராட்சிக்குட்பட்ட, பங்கள படிகை, போங்கை மொக்கை, முடியூர், வக்கனமரம், பாவிக்கரை, சக்கப்படிகை, சாமைகொடல் மற்றும் கொக்கோடு உள்ளிட்ட கிராமங்களில், பழங்குடியின மக்கள் காலங்காலமாக வசித்து வருகின்றனர்.

https://youtu.be/MEel9kI0e2Q

அதில், பங்களபடிகை - கரிக்கையூர் இடையே, சாலை துண்டிக்கப்பட்டு பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லவும், பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக கூறும் அவர்கள் கர்ப்பிணி பெண்கள் உட்பட, உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை உள்ளதாகவும்

இப்பகுதியில், யானை, கரடி, சிறுத்தை உட்பட வனவிலங்குகளின் நடமாட்டம் உள்ளதால், நீண்ட துாரம் நடந்து செல்ல முடியாத நிலையில் மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும் 

அரக்கோடு ஊராட்சி, குமரமுடி முதல் பங்கள படிகை வரை ஊராட்சி சாலையை விரைந்து சீரமைக்க வலியுறுத்தி, இப்பகுதியை சேர்ந்த இருளர் மக்கள் சிவராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.