நீலகிரி மாவட்டம் உதகை ரெக்ஸ் பள்ளியின் 49 வது ஆண்டு விழா பள்ளி தாளாளர் அருட்தந்தை கிறிஸ்டோபர் லாரன்ஸ் அவர்கள் தலைமையில், புனித சூசையப்பர் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் அருட்தந்தை நோயல், புனித தெரசன்னை ஆலயத்தின் பங்கு தந்தை லியோன் பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
விழாவில் வெலிங்டன், ராணுவ பயிற்சி கல்லூரியின் ஒருங்கிணைந்த நிதி ஆலோசகர் திரு. சத்யராஜ் IDAS., அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றி விளையாட்டு மற்றும் பல்வேறு செயல் திறன்களில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி ஊக்குவித்தார்.
தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கண்கவரும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட் சகோதிரி இதயா, பள்ளியின் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். https://youtu.be/3-cHc6-XFo0