நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானை, புலி ,சிறுத்தை போன்ற வனவிலங்குகளுக்கு வாழ்விடமாக உள்ள நிலையில் வனப்பகுதிக்குள் பழங்குடியினர்களின் கிராமங்களும் அமைந்துள்ளது.

https://youtu.be/5njYI3IL4yU

இந்த கிராமங்களில் உள்ள பழங்குடியின மக்கள் ரேஷன்  பொருட்களை வாங்க யானைக்காட்டில் மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய சூழல் இருந்த நிலையில் கார்குடி பழங்குடியினர் கிராமத்தில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவர்கள்  நடமாடும் நியாய விலை வாகனத்தை திறந்து வைத்தார்.

இதேபோல் தேவர் சோலை பேருராட்சிக்குட்பட்ட பாடந்துறை பகுதியில் சுமார் 18 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள முழு நேர நியாய விலைக்கடையையும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, கூடுதல் ஆட்சியர் கௌஷிக், நீலகிரி மாவட்ட பொறுப்பாளர் கே.எம். ராஜு, கூட்டுறவு துறை பதிவாளர் தயாளன் ஆகியோர்  கலந்து கொண்டனர் தொடர்ந்து தேவர் சோலை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.