நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட காவல் துறை சார்பாக பெண்கள் மற்றும பழங்குடியின மாணவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா அவர்கள் முயற்சியில் PROJECT AGNI திட்டத்தின் கீழ் தற்காப்பு கலை பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
கூடலூர் தேவாலா பகுதிகளில் பழங்குடியின மாணவர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி 10 பள்ளிகளில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு இந்த தற்காப்பு கலையில் பயிற்சியில் பயனடைந்திருக்கிறார்கள்.
இந்நிலையில் நீலகிரி மாவட்டம் ஊட்டி சிறுவர் மன்றத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா அவர்கள் PROJECT AGNI திட்டத்தின் கீழ் தற்காப்பு கலை பயிற்சி வகுப்புகளை அரசு செவிலியர் பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்று வரும் செவிலியர்களுக்கு தொடங்கி வைத்தார்.
இந்த பயிற்சியில் பெண்கள் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பயன்பெறுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா அவர்கள் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன், உதகை நகர காவல் துணை கண்காணிப்பாளர் நவீன்குமார், டி3 காவல் ஆய்வாளர் சந்திரசீலன், கேத்தி காவல் ஆய்வாளர் சிவசங்கரி, மற்றும் காவல்துறையினர், டேக்வான்டோ பயிற்சியாளர் அர்ஜூன், அரசு செவிலியர் பயிற்சி கல்லூரி முதல்வர் உட்பட பலர் உடனிருந்தனர்.