தடை கடந்த திறமை

ராகம் தொலைக்காட்சி பொழுதுபோக்கு அம்சங்களுடன் பலதரப்பட்ட சமூகசேவைகளை பிரதிபலன் பார்க்காமல் யாரிடமும் சிபாரிசுக்கு செல்லாமல் ஆதாயம் தேடாமல் பல இடையூறுகள் வந்த போதும் முழு மனதுடன் செய்து வருகிறது. அதில் முக்கியமாக திறமையானவர்களை கண்டுபிடித்து அவர்களை இந்த சமூகத்திற்கு அறிமுகம் செய்வதை குறிப்பிட்டு சொல்லவேண்டும்.

மாதந்தோறும் ராகம் தொலைக்காட்சி அலுவலகத்திலேயே பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச கண்பரிசோதனை மற்றும் சலுகைகளுடன் கண் சிகிச்சைகளை உதகை தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனையுடன் இணைந்து செய்து வருகிறது.
கடந்த 2014-ம் ஆண்டு மாவட்ட கல்வித்துறையின் சார்பாக உதகை அண்ணா கலை அரங்கில் பள்ளி மாணவர்களுக்ககான கலை இலக்கிய விழா நடைபெற்றது. அந்நிகழ்ச்சியை பதிவு செய்து ராகம் தொலைக்கட்சியில் ஒளிபரப்புசெய்ய கல்வி உயர் அதிகாரி அழைத்திருந்த போதும் ஊராட்சி ஒன்றிய பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர் அவர் சமூகத்தை சார்ந்த தொலைக்கட்சிக்கு கட்டணம் செலுத்தி அழைத்து வந்திருந்தார் அதனால் ராகம் தொலைக்காட்சி ஒளிப்பதிவு செய்யகூடாது என்று தடுத்ததுடன் விழா அரங்கிலேயே அவமானமும் செய்தார்.
அந்த அவமானத்தை பொருட்படுத்தாமல் தடைகளை தாண்டி ராகம் தொலைக்காட்சி அந்த கலை இலக்கிய விழாவை ஒளிப்பதிவு செய்து சிறப்பான முறையில் அன்றே ஒளிபரப்பு செய்து. . . நீலகிரி மக்களின் பாராட்டை பெற்றது. விழாவில் முக்கிய அம்சம் ”நோய்” என்ற தலைப்பில் கோத்தகிரி அவ்வூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது காவ்யஸ்ரீ என்ற மாணவியின் பேச்சாற்றல் அனைவரையும் கவர்ந்தது.
ராகம் தொலைக்காட்சி அந்த மாணவியின் பதிவை மட்டும் ராகம் தொலைக்காட்சியின் இணையததளம், யூடியுப் மற்றும் வாட்ஸ் அப்பில் அப்லோடிங் செய்ததின் மூலம் அந்த மாணவியின் புகழை உலகம் முழுவதும் பரவச்செய்தது.
ராகம் தொலைக்காட்சியின் இணையத்தளத்தில் அந்த மாணவியின் பேச்சாற்றலை கண்டு வியந்த உலக மக்கள், தினசரி ராகம் தொலைக்காட்சியை தொலைபேசியில் அழைத்து மாணவியின் விபரம் கேட்டவண்ணம் இருந்தனர். ராகம் தொலைக்காட்சி தனிப்பட்ட மாணவியின் தொலைபேசி எண்ணை யாருக்கும் கொடுக்காமல் பள்ளி தலைமை ஆசிரியரின் தொலைபேசி எண்ணையே அனைவருக்கும் வழங்கி தொடர்பு கொள்ள வைத்தது. பலபேர் தொடர்புக்கொண்டதில், இந்தியா மேம்பட்டு அமைப்பினர் அம்மாணவியை கவுரவித்து அவர்களின் அமைப்பின் தூதுவராக நியமித்துள்ளனர்.
அதற்காக ராகம் தொலைக்காட்சி பெருமைக்கொள்கிறது. திறமைகளை வெளிக்கொண்டுவருவதில் எப்போதுமே ராகம் தொலைகாட்சி முதன்மையானது என்பதில் எங்கள் நேயர்கள் யாருக்கும் மாற்று கருத்து இருக்கபோவதில்லை. நிறைவாக. . . விழாவை பதிவு செய்ய எங்களை அழைத்த கல்வி அதிகாரிக்கு எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். எங்களை ஒளிப்பதிவு செய்யவிடாமல் தடுத்து எங்களை அவமானப்படுத்திய வேற்றுப்பள்ளி தலைமையாசிரியருக்கு எங்களது பணிவான வேண்டுகோள் . . .
”சிறு துரும்பும் பல்குத்த உதவும்”. (நாங்கள் சிறு துறும்பாக இருக்கவே விரும்புகிறோம்) அன்று உங்களின் நடவடிக்கையால் நாங்கள் அரங்கத்தை விட்டு வெளியேறியிருந்தால் காவ்யஸ்ரீ-க்கு இந்த கவுரவம் கிடைக்க தாமதம் ஆகியிருக்கும். எந்த ஒரு வேலையையும் ஆத்மார்த்தமாக செய்பவர்கள் யார் ? ஆதாயத்திற்காக செய்பவர்கள் யார் ? என்று தரம் பிரித்து பார்க்க கற்றுக்கொள்ளுங்கள். உங்களை போன்றவர்களால் பலரின் திறமைகள் வெளி உலகிற்கு தெரியாமலே போய்விடுகிறது. . .
காவ்யஸ்ரீ-க்கு வாழ்த்துக்கள் அவ்வூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள் காவ்யஸ்ரீ-ன் பெற்றோருக்கு வாழ்த்துக்கள் ராகம் தொலைக்காட்சியின் பொதுநல சேவைகள் தொடரும். . .
திறமைகள் எங்கு, யாரிடம் இருந்தாலும் அவர்களை வெளி உலகிற்கு அறிமுகம் செய்யும் முயற்சியை ராகம் தொலைக்காட்சி தொடர்ந்து மேற்கொள்ளும்.
தொடர்பு கொள்ளுங்கள் உங்களின் திறமைகளை வெளிபடுத்த. . . உங்களுக்காக நாங்கள். . . உங்களால் நாங்கள். . . அன்புடன் ராகம் தொலைக்காட்சி