பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து 50 சதவீத கடைகள் அடைப்பு. மினி பஸ்கள், சுற்றுலா டாக்சி வாகனங்கள் ஒடவில்லை

பெட்ரோல்   டீசல்   விலை உயர்வுக்கு   காரணமான   மத்திய அரசை   கண்டித்து   எதிர் கட்சிகள் நாடு முழுவதும்   இன்று   கடையடைப்பு போராட்டத்தை   நடத்தி வருகிறது.   இந்திலையில்  நீலகிரி மாவட்டம்   உதகை,   குன்னூர் , கூடலூர்,   கோத்தகிரி   ஆகிய பகுதிகளில்   50   சதவீதம் கடைகளை   அடைத்து போராட்டத்திற்கு   ஆதரவு தெரிவித்தனர்.

மேலும் நீலகிரி மாவட்டத்தில்  மினி   பேருந்துகள்   சுற்றுலா டாக்சிகள்   ஒடவில்லை. அரசு பேருந்துகள், ஆட்டோகள் இயங்குகின்றன. பள்ளி மற்றும் கல்லூரிள் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.