குறிஞ்சி மலரை கொண்டாடும் வகையில் குறிஞ்சி விழா

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கின்ற குறிஞ்சி மலர் மலைகளின் அரசி நீலகிரி மாவட்டம் கல்லட்டி பகுதியில் பூத்துக்குலுங்குகின்றது.

இந்த குறிஞ்சி மலரை கொண்டாடும் வகையில் குறிஞ்சி விழா சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குறிஞ்சி மலரைப்பற்றி தெரிந்து கொள்ளவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இவ்விழாவில் பழங்குடியினர்களின் நடனம், பாரம்பரிய உணவு கண்காட்சி ஆகியவை நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட ஆட்சிதலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா கலந்துகொண்டு சிறப்பித்தார்.

பொதுமக்களுடன் இணைந்து நடனமாடி மகிழ்வித்தார். இந்நிகழ்ச்சியில் Rajya Sabha உறுப்பினர் திரு.அர்ஜுனன், குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு உதகை கோட்டாட்சியர் சுரேஷ்குமார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.