முதுமலையில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜை

முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் நடைபெற்ற விநாயகர் சதூர்த்தி விழாவில் 23 வளர்ப்பு யானைகள் பங்கேற்று விநாயகருக்கு பூஜை செய்து வழிபட்டன. கோவிலில் முன்பு வரிசையாக நின்ற வளர்ப்பு யானைகள் தும்பிக்கையை உயர்த்தி வழிபட்டதை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். சிறப்பு உணவு பொருட்களும் யானைகளுக்கு வழங்கபட்டன.