விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு கொடி அணி வகுப்பு ஊர்வலம்

உதகையில் 15.9.2018 அன்று நடைபெற உள்ள விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி. சண்முகபிரியா அவர்கள் தலைமையில் கொடி அணி வகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. தாவரவியல் பூங்கா அருகில் தொடங்கிய கொடி அணி வகுப்பு ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக மத்திய பேருந்து நிலையம் வரையிலும் தொடர்ந்து காந்தள் முக்கோணம் பகுதியிலிருந்து காந்தள் முக்கிய வீதிகள் வழியாக ரோஹிணி சந்திப்பு வரையிலும் நடைபெற்றது.