கோஆப்டெஸ்-ன் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்

நீலகிரி மாவட்டம் உதகை மலையரசி கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை இன்று (15.09.2018) நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா, இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 83 ஆண்டுகளாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் இரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ – ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக சந்தைப்படுத்தி நெசவாளர்களுக்கு பேருதவி புரிந்து வருகிறது.

தீபாவளி 2018 சிறப்புத் தள்ளுபடி விற்பனைக்காக கைத்தறி இரகங்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் அனைத்து விற்பனை நிலையங்களிலும் 15.09.2018 முதல் 30 சதவீதம் அரசு தள்ளுபடி வழங்குகிறது என நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.