தென்னகத்தின் கல்வாரி குறைதீர்க்கும் குருசடி ஆண்டவர் – திருச்சிலுவை மகிமை விழா

உதகை காந்தள் பகுதியில் அமைந்துள்ள குருசடி திருத்தலத்தின் திருச்சிலுவை மகிமை விழா 9.9.2018 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

16.9.2018 ஞாயிற்றுக்கிழமை திருச்சிலுவை மகிமை விழா ஆடம்பர தேர் பவனியுடன் முக்கோணம் பகுதியிலிருந்து தொடங்கி குருசடி திருத்தலம் வந்தடைந்தது.


திருத்தலத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் புதுநன்மை உறுதிபூசுதல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள், பங்கு மக்கள் கலந்துகொண்டனர்.