வடகிழக்கு பருவமழையை எவ்வாறு எதிர்கொள்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

வடகிழக்கு பருவமழையை எவ்வாறு எதிர்கொள்வது என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி 7.9.2018 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் Dt. BDO. திருமதி.சுகந்தி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) திரு. பிரேமானந்தன் குழுவினர்களுடன் மழைவெள்ளத்தின் பொது தாழ்வான பகுதிகளான

பெந்தட்டி
மொத்தகொம்பை
சுவாமிநாத நகர்
உல்லத்தி
காரபிள்ளு
கல்லட்டி


ஆகிய பகுதிகளுக்கு சென்று மழைக்காலத்தின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் இளைஞர்கள், மாணவ – மாணவிகள் கலந்துகொண்டனர்.

மேலும் அரசு ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களுக்கும், மாணவ – மாணவிகளுக்கும் மழைக்கால விழிப்புணர்வு குறித்தும் தீயணைப்பு கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது போன்ற செயல் விளக்கமும் செய்து காண்பிக்கப்பட்டது.