சிறுத்தை ஒன்று நாயை வேட்டையாடி தூக்கி சென்ற காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதனால் பொதுமக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள அரவேணு பகுதியில் கடந்த சில நாட்களாக வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் வலம் வருபவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் 15.9.2018 அன்று இரவு அங்கிருந்த ஒரு வீட்டின் காம்பௌண்ட் சுவர் மீது ஏறி உள்ளே புகுந்த சிறுத்தை ஒன்று அங்கிருந்த நாயை வேட்டையாடி கடித்து துாக்கி சென்ற காட்சி அங்குள்ள சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகியுள்ளது.

தொடர்ந்து இந்த பகுதியில் அடிக்கடி வன விலங்குகளின் நடமாட்டம் காணப்படுப்படுகிறது. இதுகுறித்து வனத்துறையினரிடம் தெரிவித்தும் வனத்துறை சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அதனால் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, வனத்துறையினர் சம்பந்தபட்ட பகுதியினை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கும்
பட்சத்தில் உயிழப்புகளை தவிர்க்கலாம் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.