ஆரம்பகால குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்வி தினம்

பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவாக இருப்பது வருத்தம் அளிக்கிறது என்று உணர்ந்து அனைத்து தரப்பு மக்களும் இந்த ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்க முயற்சி எடுக்கவேண்டும் என்று கூறினார்.

இதற்கான விழிப்புணர்வு நாடு முழுவதும் துவங்கப்பட்டு பெற்றோர் மத்தியில் அனைத்து பள்ளிகளிலும் இந்த விழிப்புணர்வு இந்த மாதம் முழுவதும் நடத்தப்பட வேண்டும் என்று நீலகிரி மாவட்டத்தில்

முதன்மை கல்வி அலுவலர் திரு. நஸ்ரூதீன் அவர்களின் ஆலோசனை படி மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளிலும் இந்த விழிப்புணர்வு துவங்கப்பட்டது.

உதகை புதுமுந்து பகுதியில் அமைந்துள்ள நகராட்சி ஆரம்ப பள்ளியில் ஊட்டச்சத்து மற்றும் காய்கறிவகைகள் பார்வைக்கு வைக்கப்பட்டு குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது