உதகை அரசினர் கலைக்கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்

உதகை அரசினர் கலைக்கல்லூரியில் 29.9.2018 சனிக்கிழமை அன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் உதகை வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பாக தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

எழுதப் படிக்க தெரிந்தவர் முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள், ஐடிஐ டிப்ளமோ, மருத்துவம் சார்ந்த படிப்புகள் முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வரிய வாய்ப்பினை பயன்படுத்திகொள்ளுமாறு கேட்டுகொள்ளப் படுகிறார்கள்.

மேலும் முகாமிற்கு வருபவர்கள் தங்களின் அனைத்து கல்வி சான்றிதழ்கள், நகல்கள் மற்றும் ஆதார் அட்டை கொண்டுவரும்படி கேட்டுகொள்ளப்படுகின்றனர்.

– மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர். உதகமண்டலம்