கோவை ஒமேகா ஈவென்ட்ஸ்-ன் கிட்ஸ் & பேமலி Expo (கண்காட்சி)

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 6 வருடங்களாக +2 மாணவர்கள் பயன் பெறும் வகையில் கல்வி கண்காட்சியும், இரண்டு ஆண்டுகளாக இலவச மருத்துவ முகாமும் நடத்தி வரும் ஒமேகா ஈவென்ட்ஸ் நிறுவனம் மூலம் தற்போது பொள்ளாச்சி, ஈரோடு, கோபி , சக்தி, திருச்சங்கோடு ஆகிய பகுதிகளில் கிட்ஸ் & பேமலி Expo (கண்காட்சி) நடைபெறுகிறது.

பொள்ளாச்சியில் 21.8.2018 முதல் 24.9.2018 வரை நடைபெற்றது. கண்காட்சியை மாண்புமிகு துணை சபாநாயகர் திரு .பொள்ளாச்சி ஜெயராமன் அவர்கள் தொடக்கி வைத்தார்.

கண்காட்சியில் பள்ளி குழந்தைகளுக்கு ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

29.9.2018 முதல் 2.10.2018 வரை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சக்தியில் ராமசாமி கவுண்டர் திருமண மண்டபத்தில் கண்காட்சி நடைபெறுகிறது.

12.10.2018 முதல் 15.10.2018 வரை கோபி சீதா கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. இக்கண்காட்சியை மாண்புமிகு கல்வி அமைச்சர் திரு. செங்கோட்டையன் அவர்கள் குத்து விளக்கேற்றி தொடங்கி வைக்கிறார்.