உதகை மாணவர்கள் மினி உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு தேர்வு

உதகை அரசு கலை கல்லூரியில் படிக்கும் மூன்று மாணவர்கள் செக் குடியரசு நாட்டில் அக்டோபர் 4 முதல் 7ம் தேதி வரை நடைபெறவிருக்கும் 21 வயதிற்குட்பட்டோருக்கான மினி உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பிரவீன் இவான் பி.ஏ. வரலாறு இரண்டாம் ஆண்டும், ராகுல் பி.ஏ. பொருளாதாரம் மூன்றாம் ஆண்டும், அஜித்குமார் பி.ஏ. பாதுகாப்பியல் மூன்றாம் ஆண்டும் உதகை அரசு கலைக்கல்லூரியில் படித்து வருகிறார்கள்.

இம்மாணவர்கள் மூன்று பேரும் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவர்கள். இவர்கள் மூன்று பேரும் தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவிலான போட்டியில் தமிழக அணிக்காக விளையாடியுள்ளனர். இம்மாணவர்கள் மூன்று பேரும் தங்களின் கடுமையான பயிற்சி மற்றும் திறமையால் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.