உதகையில் உலக பார்மஸி தினம் அனுசரிக்கப்பட்டது

ஆண்டுதோறும் செப்டம்பர் 25ம் தேதி உலக பார்மஸி தினமாக கொண்டாடப்படுகிறது. உதகை ஜே.எஸ்.எஸ். பார்மஸி கல்லூரி வருடந்தோறும் இத்தினத்தை சிறப்பாக கொண்டாடுவார்கள். இவ்வருடமும் இக்கல்லூரியின் சார்பில் உலக பார்மஸி தினம் அனுசரிக்கப்பட்டது.

ஜே.எஸ்.எஸ். பார்மஸி கல்லூரியில் விழிப்புணர்வு பேரணியை கல்லூரியின் முதல்வர் தனபாலன் தொடங்கிவைத்தார். பேரணி சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை வழியாக உதகை காந்தி மைதானத்தை வந்தடைந்தது. அங்கு கல்லூரி மாணவர்கள். கல்லூரியின் பெயர் மற்றும் மாத்திரைகள் வடிவில் அணிவகுத்து நின்றனர்.