காவல்துறையின் சார்பில் ஆதிவாசி பழங்குடியின மக்களுக்கு நலதிட்ட உதவிகள்

நீலகிரி மாவட்டம் கொலக்கொம்பை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெடுகல்கம்பை ஆதிவாசி கிராமத்தில் காவல்துறையின் சார்பில் ஆதிவாசி பழங்குடியின மக்களுக்கு நலதிட்ட உதவிகளை நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. சண்முக பிரியா அவர்கள் வழங்கினார்கள்.

நெடுகல்கம்பை உண்டு உறைவிடப்பள்ளிக்கு கிரைண்டர், மிக்ஸி, சமையல் பாத்திரங்கள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு நோட் புக், எழுது பொருட்கள், கல்வி உபகரணங்கள் வழக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மதுவிலக்கு அமுல் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், குன்னூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர், ஜே.எஸ்.எஸ். பார்மஸி கல்லூரி முதல்வர் மற்றும் காவல் ஆய்வாளர்கள், காவல்கள் கலந்துக்கொண்டனர்.