இறந்து போன மாணவனின் கல்வி கடனை தானே வங்கிக்கு செலுத்திய உதகை நீதிபதி மற்றும் வக்கீல் சங்க தலைவர்

நீலகிரி மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழுவின் மூலம் பல வழக்குகள் சமரசம் செய்யப்பட்டு வருகின்றன. உதகையில் சாந்தி என்பவரது மகன் பாலமுரளி என்பவர் ஓரியண்டல் வங்கியில் கல்விகடனாக ரூபாய் 1,30,000/- பெற்றுள்ளார்.
 
அதில் ரூபாய் முப்பதாயிரம் செலுத்தவேண்டிய நிலையில் எதிர்பாராத விதமாக மாரடைப்பில் மரணமடைந்துள்ளார். இந்நிலையில் வங்கிக்கு செலுத்தவேண்டிய ரூபாய் ஒரு லட்சத்தை செலுத்த வேண்டும் என வங்கி மூலம் பாலமுரளியின் தாயார் திருமதி சாந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
 
அதனை சாந்தி மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளார். அவரது மனுவை விசாரித்த மாவட்ட சட்டபணிகள் ஆணைக்கழு செயலாளர் / முதன்மை சார்வு நீதிபதி சுரேஷ் குமார் அவர்கள் வங்கி மேளாளர் மற்றும் வங்கி வழக்குஞரை அழைத்து திருமதி. சாந்தி அவர்களின் குடும்ப சூழ்நிலை எடுத்து பேசியதன் பெயரில் பாலமுரளி செலுத்த வேண்டிய ஒருலட்சத்திலிருந்து ரூபாய் 90.000/- க்கு விலக்களித்து ரூபாய் 10,000/- மட்டுமே செலுத்தினால் போது என்று வங்கியின் சார்பாக தெரிவிக்கப்பட்டது
 
ஆனால் சாந்தி ர்பாய் 10,000/- யும் செலுத்த வசதியில்லை என்று கூறியதால், அவரின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு ரூபாய் 10,000/- மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் / சார்பு நீதிபதி சுரேஷ் குமார், நீலகிரி மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கத்தலைவர் ஸ்ரீஹரி, வங்கி வழக்குரைஞர் ஆகியோர் செலுத்தி மரணமடைந்த பாலமுரளியின் கல்வி கடன் வழக்கை தீர்த்துவைத்தனர்.
 
மகன் பாலமுரளி எதிர்பாராமல் இறந்துவிட்ட நிலையில், கல்வி கடனை செலுத்த முடியாமல் தவித்த பாலமுரளியின் தாயார் சாந்தி மகனின் கல்வி கடன் வழக்கை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தீர்த்துவைத்ததால் நிம்மதி அடைந்ததாக நீலகிரி மாவட்ட நீதிபதி வடமலை, மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் / சார்பு நீதிபதி சுரேஷ் குமார், நீலகிரி மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கத்தலைவர் ஸ்ரீஹரி, வங்கயின் மேலாளர் மற்றும் வழக்குரைஞர் ஆகியோருக்கு கண்ணீர் மல்க நன்றி கூறினார்.