ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேளாண்மை திட்டம் – IFHRMS

தமிழ்நாடு அரச நிதி மேளாண்மை தொடர்பான அரசு பணிகள் திறம்பட நடைபெறவும், கருவூலபணிகளை மேம்படுத்தும் பொருட்டும் பிரத்தியேகமான வழிமுறைகளை கையாண்டு மனிதவள மேளாண்மையை ஒருங்கிணைத்து ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேளாண்மை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
 
இத்திட்டத்தில் அனைத்து பணியாளர்களின் பணிபதிவேடு மின்னனுமயமாக்கல் மற்றும் சம்பளப்பட்டியல் இணையவழியில் சமர்ப்பிக்கவும் செயல்படுத்தப்படுகிறது.
 
இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தமிழ்நாடு மற்றும் புதுடெல்லியில் உள்ள சம்பளம் மற்றும் கணக்கு அலுவலகத்தில் சம்பளம் பெற்றுவழங்கும் அலுவலர்கள் தங்களது பட்டியல்களை நேரடி இணையம் மூலம் எவ்வித கால நிபந்தனையும் இல்லாமல் கருவூலத்தில் பட்டியல் சமர்ப்பிக்க இயலும்.
 
கருவூலங்கள் காகிதமற்ற அலுவலகங்களாக மாற்றப்படுவது மட்டுமின்றி சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் தங்களது பட்டியல்களை கருவூலங்களில் சமர்பிக்க நேரில் வரவேண்டிய் அலைச்சல் முற்றிலும் தவிர்க்கப்படும்.
 
மேலும் சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் இணைய வழி மூலம் பட்டியல்களை கருவூலத்தில் சமர்ப்பிப்பதிலிருந்து பயனாளியின் வங்கி கணக்கில் பணம் சேரும் வரையிலான ஒவ்வொரு நிலையையும் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகவும், தெளிவாகவும் அறிந்துக்கொள்ள முடியும்.

புதிதாக உருவாக்கப்படும் இந்த திட்டத்தினால் பட்டியல்கள் சமர்;பிக்கப்பட்ட அதே நாளில் வங்கிக் கணக்கில் தீர்வு செய்ய இயலும். இத்திட்டத்தினால் சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் கருவூலத்திற்கும் மாதாந்திர கிணக்கின்போது நடைபெறும் ஒத்திசைவுப் பணி இனி வருங்காலங்களில் தவிர்க்கப்படும்.

புதியதாக அறிமுகப்படுத்தப்படும் நேரடி இணையவழிபட்டியல் சமர்ப்பிக்கப்படும் முறை மூலம் கருவூலத்துறையில் காகிதப் பயன்பாடு முற்றிலும் குறைக்கப்பட்டு அதற்கான சேவைகள் குறைக்கப்படுவதுடன் பணியாளர்களின் பணிச்சுமை வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. கணினி வழி பரிவர்த்தனைகள் முறைப்படுத்தப்படுவதால் மனிதவள பயன்பாட்டால் நிகழும் தவறுகள் மற்றும் முறைகேடுகள் தவிர்க்கப்படும்.

அனைத்து பணியாளர்களும் தங்களது பணியாளர்களும் தங்களது பணிப்பதிவேட்டை எளிதாக பார்க்க இயலாத நிலையிலிருந்து பணிப்பதிவேட்டினை கணினி மற்றும் கைபேசி செயலியிலும் தங்களது கடவுச்சொற்களைப் பயன்படுத்தி அறிந்து கொள்ள இயலும். மேலும் இத்திட்டத்தில் பணியாளரின் கணிப்பதிவேட்டில் ஏற்படும் தவறான பதிவுகளை சுயசேவை என்ற முறையை பயன்படுத்தி கணினி வழியிலாக உரிய அலுவலருக்கு விண்ணப்பித்து சரிசெய்து கொள்ள முடியும். ஓர் அரசுப் பணியாளர் அவரது சம்பள பிடித்தங்கள் கடன் மற்றும் முன்பணங்கள் விடுப்புத்தொடர்பாக விவரப் பதிவுகளை அறிய இயலும். மேலும் விடுப்பினை இணைய வழி கோரிக்கையாக விடுக்க இயலும்