உதகை, காந்தல் பகுதியில் தூய்மை ரத விழிப்புணர்வு

உதகை, காந்தல் பகுதியில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மருந்து நிர்வாகத்துறை அரசு முதன்மைச் செயலாளர் / ஆணையர் திருமதி. பி. அமுதா, இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் தூய்மை ரத விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள், உணவு வணிக சங்கங்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், தன்னார்வலர்கள், நடைபாதை கடை உரிமையாளர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.