தினசரி மூன்று டன் அளவிற்கு உரம் தயாரிக்கும் பணி துவக்கம்

உதகை காந்தள் முக்கோணம் நகராட்சி இடத்தில் சுமார் 35லட்சத்தில் காய்கறி கழிவிலிருந்து உரம் தயாரிக்கும் இயந்திரம் தனியாரால் நிறுவப்பட்டுள்ளது.

உரம் தயாரிப்பதற்கு உண்டான காய்கறி கழிவுகள் உதகை நகராட்சி காய்கறி மார்கெட்டிலிருந்து பெறப்பட்டு தினசரி மூன்று டன் அளவிற்கு உரம் தயாரிக்கும் பணியை இன்று (28.9.2018) தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை மற்றும் மருந்து நிர்வாக துறையின் அரசு முதன்மை செயலாளர் / ஆணையர் திருமதி. அமுதா இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.