காட்டேரி பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் நெடுஞ்சாலை துறை மூலம் அகற்றம்

குன்னுார் காட்டேரி பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் நெடுஞ்சாலை துறை மூலம் அகற்றம்.நகராட்சி கட்டிடத்தை அகற்றாததால் பொக்லைன் எந்திரத்தின் மீது ஏறி பொதுமக்கள் போராட்டம். குன்னூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு

நீலகிரி மாவட்டம், குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள காட்டேரி சந்திப்பிலிருந்து மஞ்சூர், கொலக் கொம்பை, ஆர்செடின் போன்ற பகுதிகளுக்கு செல்ல பிரதான சாலை ஒன்று உள்ளது. குறிப்பாக காட்டேரி சந்திப்பிலிருந்து செல்லும் சாலை ஒரத்தில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து நகராட்சி கட்டிடம் உட்பட 22 கடைகள் செயல்ப்பட்டு வந்தது.

இந்த இடத்தை காலி செய்ய உரிமையாளர்களுக்கு பல முறை நெடுஞ்சாலை துறை மூலம் நோட்டிஸ் கொடுக்கப்பட்டது. இருப்பினும் கடைகள் காலி செய்யப்படாததை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப் பொறியாளர் பாரிஜாதம் தலைமையில் ஊழியர்கள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.

அசாம்பாவீதம் நடக்காமல் இருக்க பாதுகாப்பிற்காக குன்னுார் நகர போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். உரிமையாளர்கள் தங்கள் உடமைகளை எடுத்துச்சென்றவுடன் பொக்லைன் எந்திரம் முலம் கடைகள் இடித்து தள்ளப்பட்டன. இந்த நிலையில் ஆக்கிரமிப்பு கடைகளின் மத்தியில் நகராட்சி கட்டிடத்தில் ரேஷன் கடை செயல்ப்பட்டு வந்தது.

நகராட்சி கட்டிடம் என்பதாலும், நியாய விலை கடையை விட்டு மற்ற கடையை அகற்ற துவங்கினர். இந்த முடிவிற்கு கடைகாரர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது நகராட்சி கடைகளை விட்டு மற்ற கடைகளை பொக்லைன்எந்திரம் இடிக்க வந்தபோது கடைகாரர்களும் அப்பகுதி மக்களும் பொக்லைன் எந்திரத்தின் மீது ஏறி நின்று நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தையும் இடிக்க கோரி கோஷம் எழுப்பினர்.

உடனடியாக போலீசார் அப்பகுதி மக்களிடமும் கடைகாரர்களிடமும் சமரசம் பேசினர். இருப்பினும் அவர்கள் நகராட்சி கட்டிடத்தை உடனடியாக இடிக்க வேண்டும் என்று வலியுறுது்தினர்.

இதனை தொடர்ந்து கடைகாரர்களும் அந்த பகுதி பொதுமக்களும் திடீரென்று சாலை மறியலிலும் ஈடுபட முயன்றனர். நொடுஞ்சாலை துறையினர் நகராட்சி கட்டிம் இப்பொழுதே இடிக்கப்படும் என்று கூறி பொக்லைன் எந்திரம் மூலம் நகராட்சி கட்டிடத்தை இடித்தனர். பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர். காட்டேரியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.