காலாட்படை தின விழா 2018 ஆண்டை முன்னிட்டு சைக்கில் பேரணி எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் துவங்கியது

எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் காலாட்படை இயக்கத்தின் கீழ் ராணுவ தலைமையகம் மூலம் சாகச மற்றும் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் சைக்கில் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியின் நோக்கம் 27 அக்டோபர் அன்று காலாட்படை தினத்தை கொண்டாடும் தருணத்தில் உள்ளது. கேப்டன் சுபம் சிங் தலைமையில் 10 மிதிவண்டிகள் கொண்ட இந்தி அணி எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் அமைந்துள்ள தங்கராஜ் விளையாட்டு மைதானத்தில் 28 செப்டம்பர் 2018 அன்று பிரிகேடியர் எஸ். கே. சாங்குவான் வி.எஸ்.எம். கமாண்டென்டு எம்.ஆர்.சி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த சைக்கில் பேரணி குழு வெலிங்டன் முதல் புது தில்லி வரை 2741 கிலோமீட்டர் தூரத்தை 30 நாட்களுக்குள் முடிக்கும்.

இந்த குழு எழு மாநிலங்கள் வழியாக இடநிலைப்படுத்து வதற்காக, மைசூர், பெங்களுர், பெல்காம், கோலப்பூர், சதரா, புனே, மும்பை, சூரத், வடோத்ரா, உதய்பூர், அஜ்மீர், ஜெய்பூர் போன்ற முக்கிய இடங்களை கடக்கின்றனர். இந்திய ராணுவம், தூய்மை இந்தியா ஆகிய வற்றில் இணைவது குறித்து விழிப்புணர்வு பிரசாரத்தை இக்குழு மேற்கொள்ளும்.

இதுபோன்ற பேரணி அப்பகுதிகளில் வழிப்புணர்வை அதிகரிக்கவும், ஆயுதபடைகளின் நேர்மறையான பிம்பத்தை பொதுமக்களுக்கு அளிக்கும் பொருட்டு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கூடுதலாக பேரணியில் பங்கேற்றவர்களின் மத்தியில் சாகச தோழமை மற்றும் குழு உணர்வை இக்காலாட் படை புகட்டுகிறது.