இந்தியாவில் இருந்து இடம் பெற்றுள்ள 49 உயர் கல்வி நிறுவனங்களில் JSS உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 5வது இடத்தை பெற்றுள்ளது

ஜெகத்குரு ஸ்ரீ சிவராத்ரீஷ்வரா பல்கலைக்கழகம், மைசூரு, கர்நாடகா ஜெ. எஸ். எஸ். உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக்கழக மான்யகுழு சட்டம் 1956 பிரிவு 3-ன் கீழ் நிகர்நிலைப்கல்கலைக்கழகமாக 2008 ஆம் ஆண்டு இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையால் அறிவிக்கப்பட்டது. பல்கலைகழக மான்யகுழுவின் பரிந்துரைப்படியும் ஒப்புதலோடும் பல்கலைக்கழக மான்யகுழு சட்டம் 1956 பிரிவு 3-ன் கீழ் அளிக்கப்பட்டுள்ள விதிகளின்படியும் ஜெகத்குரு ஸ்ரீ சிவராத்ரீஷ்வரா பல்கலைக்கழகம் என்ற பெயர் ஜெ எஸ் எஸ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு பல்கலைக்கழக மான்யகுழு சட்டம் 1956 பரிவு 3-ன் கீழ் அளிக்கப்பட்டுள்ள விதிகளின்படி நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும் ஜெ. எஸ். எஸ். உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமானது 2018-ல் மான்ய குழுவால் தன்னாட்சி அங்கீகாரம் (வகை II) வழங்கப்பட்டுள்ளது.

ஜெ. எஸ். எஸ். உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமானது 2018 ஆம் ஆண்டு இந்கிலாந்து நாட்டிலிருந்து வழங்கப்படும் QS தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் 4 நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பெற்றது. கர்நாடக மாநிலத்தில் இந்த அங்கீகாரம் பெற்ற முதல் கல்வி நிறுவனமாகவும் இந்தியாவில் மருத்துவம் சார்ந்த கல்வி நிறுவனங்களில் 4 நட்சத்திர அந்தஸ்து பெற்ற முதல் கல்வி நிறுவனமாகவும் சிறப்பு பெற்றுள்ளது.

தற்போது செப்டம்பர் 2018 26ஆம் தேதி அன்று வெளியிடப்பட்ட 2019 ஆம் ஆண்டிற்கான டைம்ஸ் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமானது. உலகளவில் பங்குபெற்ற 1258 பல்கலைக்கழகங்களில் 401-500 என்ற தரவரிசைப்பட்டியலில் இடம்பெற்றுள்ள 49 உயர் கல்வி நிறுவனங்களில் 5ஆவது இடத்தை பெற்றுள்ளது.


தற்பொழுது ஜெ. எஸ். எஸ். உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமானது தனது 4 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் 2 பல்கலைக்கழகத் துறைகளின் மூலமாக 147 வகையான உயர் படிப்புகளை வழங்கி வருகிறது. சுமார் 5500 மாணவர்கள் இந்த உயர் கல்விகளைப் பெற்றுவருகின்றனர்.