நூற்றாண்டு பழமை வாய்ந்த நீராவி என்ஜின் மூலம் சிறப்பு மலை ரயில்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நூற்றாண்டு பழமை வாய்ந்த நீராவி என்ஜின் மூலம் உதகை – கேத்தி இடையே சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டது.

இந்த மலை ரயில் சேவையை உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் மலை ரயிலில் பயணம் செய்து மகிழ்ந்தனர்.