ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டியவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இனிப்பும் பரிசும் வழங்கினார்

நீலகிரி மாவட்ட காவல் துறை சார்பாக உதகை சேரிங் கிராஸ் பகுதியில் இன்று 3.10.2018 நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி. சண்முகப்ரியா அவர்கள் தலைமையில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இருசக்கர வாகனங்களில் செல்லும்போது ஹெல்மெட் (HELMET) அணிவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் பொது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து சென்றவர்களுக்கு இனிப்பும் சிறிய பரிசும் வழங்கப்பட்டது ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்து விழுப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர், காவல் ஆயிவாளர்கள், பிரிக்ஸ் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.