மஞ்சூர் மற்றும் சுற்றுவட்டாரா பகுதியில் கரடி நடமாட்டம் – குடியிருப்பு பகுதிகளுக்கு கரடி உலா வந்ததால் பொதுமக்கள் அச்சம்

உதகை அருகே உள்ள மஞ்சூர் மற்றும் சுற்றுவட்டாரா பகுதியில் கரடி நடமாட்டம். குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் கரடி உலா வந்ததால் பொதுமக்கள் அச்சம்…

நீலகிரி மாவட்டம் 60 சதவீகிதம் வனப்பகுதியை கொண்டதாகும். இந்த வனப்பகுதியில் புலி,யானை, கரடி, காட்டெருமை, மான் ,சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. சமீபகாலமாக இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வாடிக்கையாகிவிட்டது.

குறிப்பாக உதகை, கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டெருமை மற்றும் கரடி போன்ற வனவிலங்குள் பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியகளில் வந்து பொதுமக்களை அச்சுருத்தியும் செல்கின்றது.

இந்நிலையில் உதகை அருகே உள்ள மஞ்சூர் பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் மின்வாரிய அலுவலகத்தை ஒட்டியுள்ள சாலையில் கரடி ஒன்று இரவு நடந்து சென்றது. உணவு தேடி வந்த இந்த கரடி அந்த சாலையில் நடந்துச் சென்று பின்பு மின்வாரிய அலுவலகம் தடுப்பு சுவரை தாண்டி உள்ள ஒடி பின்னர் சாலைய சாலையை கடந்து அருகில் உள்ள புதருக்குள் சென்றுள்ளது.

குடியிருப்புக்கு அருகாமையில் உலா வரும் இந்த கரடியை அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Web_TV : https://ragam.tv/

Android_App : https://play.google.com/store/apps/details?id=com.ragamtv.app
IOS_App : https://itunes.apple.com/in/app/ragamtv/id1243439408?mt=8