கன மழையின் காரணமாக ராட்டன் டாட்டா சாலையில் விழுந்த மரத்தை கொட்டும் மழையில் தீயணைப்பு துறையினர் உடனடியாக அகற்றினர்

கன மழையின் காரணமாக ராட்டன் டாட்டா சாலையில் விழுந்து மரத்தை கொட்டும் மழையில் தீயணைப்பு துறையினர் உடனடியாக அகற்றினர்.

வரும் அக்டோபர் 7-ந்தேதி தமிழகம் முழுவதும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலார்ட் அறிவித்துள்ளது. குறிப்பாக மலை மாவட்டங்களில் கன மழை கொட்டும் என எச்சரித்துள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் இன்று மதியம் முதலே லேசான மழை பெய்து வந்தது.

மாலை நேரத்தில் உதகை, குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது. பல இடங்களில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி காட்சி அளிக்கிறது.

இதனால் பொதுமக்களும் வாகன ஒட்டிகளும் அவதிக்குள்ளாகினர். மேலும் உதகை-குன்னூர்-மைசூர் உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைகளிலும் அருவங்காடு, தலைகுந்தா, மஞ்சனகொரை, ராட்டன் டாட்டா, உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்ட்டது.

இதன் காரணமாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், நெடுஞ்சாலை துறையினர் மற்றும் பொதுமக்கள் மரங்களை அகற்றினர்.