குன்னூரில் பழங்குடியினர் வாழ்வியல் முறை குறித்த ஓவிய கண்காட்சி

குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி வரலாற்று துறை மாணவிகள் – உதகை ஆவண காப்பகம் மற்றும் நீலகிரி ஆதிவாசி சங்கம் சார்பில் தோடர், பனியர், கோத்தர், இருளர், குரும்பர், காட்டுநாயக்கர் உள்ளிட்ட பழங்குடியினரின் வாழ்வுமுறை மற்றும் கலாச்சாரம் போன்றவற்றை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்

ஓவிய கண்காட்சி குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

இக்கண்காட்சியில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளிலிருந்து மாணவ – மாணவியர் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டனர்.