மினி பஸ்ஸின் டயர் சிக்கி மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

பந்தலூர் அருகே சேரம்பாடியிலிருந்து தாளூர்க்கு 5.10.2018 அன்று காலை 7.00 மணியளவில் தனியார் மினி பஸ் சென்றுகொண்டிருந்தது. கோரஞ்சால் என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்த பொது கேபிள் பதிக்க தோண்டப்பட்ட குழியில் மினி பஸ்ஸின் டயர் சிக்கி மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காலை நேரம் என்பதால் இதில் 6 பயணிகள் மட்டுமே பயணம் செய்தனர். பஸ் விபத்துக்குள்ளானதால் அதில் சிக்கி கொண்ட 6 பேரை அப்பகுதி மக்கள் பஸ்ஸின் ஜன்னல் வழிகாய சிறு காயங்களுடன் மீட்டனர்.