வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து அரசு துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம்
உதகை தமிழகம் அரசினர் விருந்தினர் மாளிகையில் 6.10.2018 அன்று தமிழ்நாடு மின்விசை நிதி, உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவன அரசு முதன்மை செயலாளர் நிர்வாக இயக்குநர் மற்றும் நீலகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு. சந்திரகாந்த் பி காம்ளே இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து அரசு துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., – மாவட்ட காவல் கண்கானிப்பாளர் திருமதி. சண்முகபிரியா – மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செல்வராஜ் மற்றும் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்