150-ஆண்டுகள் பழமை வாய்ந்த பசுமையான மரம் எரிந்து சேதம்

உதகையில் மழை பெய்து வரும் நிலையில் மின்னல் தாக்கி அரசு தாவரவியல் பூங்காவில் பரந்த புல்வெளியில் அழகாக காட்சியளித்த 150-ஆண்டுகள் பழமை வாய்ந்த அரக்கேரியா பிட்வில்லி என்ற பசுமையான மரம் எரிந்து சேதம் அடைந்தது… இம்மரம் ஏராளமான திரைபடங்களில் இடம் பெற்றுள்ளது.

உதகையில் கன மழை பெய்து வரும் நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது. இந்நிலையில் மாலை சுமார் 5.35 மணியளவில் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள 150-ஆண்டுகள் பழமை வாய்ந்த அரக்கேரியா பிட்வில்லி என்ற பசுமையான மரத்தை மின்னல் தாக்கியது. இதில் 100 அடி உயரம் கொண்ட அந்த மரம் முழுவதும் தீ பற்றி எரிந்தது. அதனை கண்ட பூங்கா ஊழியர்கள் உடனடியாக உதகை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

 

தகவலின் பெயரில் சம்ப இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கொளுந்து விட்டு எரிந்த மரத்தின் மீது தண்ணீர் பீச்சி அடித்து தீயை அனைத்தனர். தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம் உள்பட நூற்றுக்கணக்கான திரைபடங்களின் இடம் பெற்றுள்ளதால் இந்த பழமையான அரிய வகை மரம் தீ பிடித்து எரிந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.