காவல் துறை வாகனம் கவிழ்ந்து விபத்து

நீலகிரி மாவட்டத்திற்கு கடந்த 6 தேதி சென்னையில் இருந்து TNTRF காவல் துறையினர் ரெட் அலார்ட் பாதுகாப்பு பணிக்கு வந்திருந்தனர். ரெட் அலார்ட் வாபஸ் பெற்ற நிலையில் பணி முடித்து ஊட்டியில் இன்று இருந்து காலை ஊர் திரும்பிய போது அவர்கள் சென்ற காவல் துறை வாகனம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் KNR அருகில் நடுரோட்டில் கவிழ்ந்தது.

இதில் பயணம் செய்த காவலர்கள் 33 பேர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். இன்ஸ்பெக்டர் சந்திரபோஷ், ஓட்டுநர் சிவக்குமார் ஆகியோர் காயம் அடைந்தனர் அவர்கள் இரண்டு பேரையும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
விபத்து நடத்த இடத்திற்கு நீலகிரி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திருமதி. சண்முகபிரியா அவர்கள் நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார்.