தொட்டபெட்டா பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது

நீலகிரி மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலா தளம் தொட்டபெட்டா . நாள்தோறும் இங்கு ஆயிரக்கனக்கான சுற்றுலா பயணிகள் வந்து இயற்கையை ரசித்து செல்கின்றனர்.

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு , வாகனங்களின் கண்காணிப்பு முதலிய பாதுகாப்பு அம்சங்கள் கருத்தில் கொண்டு தொட்டபெட்டா பகுதியில் நீலகிரி மாவட்ட காவல் துறையின் சார்பாக கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு கேமராக்கள் கண்காணிப்பு அறை ஐந்து சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு அறையை நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. சண்முகபிரியா அவர்கள் திறந்து வைத்தார்.