மரத்தை வெட்டி அகற்றும் பணியின்போது கிளை விழுந்து ஒருவர் பலி

உதகை அரசு கலை கல்லூரி வளாகத்தில் அபாயகரமான நிலையில் உள்ள மரங்களை அகற்றும் பணி கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (23.10.2018) மரத்தை வெட்டி அகற்றும் பணி நடைபெற்ற போது எதிர்பாராத விதமாக மரக்கிளை ஒன்று அங்கு பணியாற்றி கொண்டிருந்த ஒருவர் மீது விழுந்து விபத்து ஏற்றபட்டது. இதில் அந்த பணியாளர் சம்பள இடத்திலேயே உயிர்யிழந்தார். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.